டில்லி,
மிழக மீனவர்கள் பிரச்சினை காரணமாக  இந்தியா -இலங்கை இடையே நாளை டில்லியில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அதையொட்டி இன்று சென்னை கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமாருடன் மீனவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்பட்டு, மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுவது வாடிகையாக உள்ளது. இதை கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
fisherman
கடலில் இரு நாட்டு மீனவர்களும், எல்லை  தாண்டி மீன் பிடிப்பது குறித்து, இந்தியா இலங்கை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் அமைப்பு இணைந்து பேச்சு வார்த்தை நடத்த  இந்திய இலங்கை அரசு ஏற்பாடு செய்தது.
இதுவரை  4 கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
2014ம் ஆண்டு ஜனவரியில்  தமிழக – இலங்கை மீனவப் பிரதிநிதிகளின்  முதல்கட்ட பேச்சுவார்த்தை  சென்னை மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரண்டாவதாக  2014ம் ஆண்டு மே 5-ந்தேதி கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தை  சென்னை தேனாம் பேட்டையில் 2015, மார்ச் 3ந்தேதி  அன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் , இலங்கை மீனவர்கள் , தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி  வலைகளை பயன்படுத்தி  இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என்றனர்.
தமிழக மீனவர்கள்  எங்கள் பகுதியில் மீன் பிடிப்பதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.
இதற்கு தமிழக பிரதிநிதிகள் காலங்காலமாக மீன்பிடித்துவரும் பகுதியாகும். ஆகவே,  இலங்கை மீனவர்கள் எங்களை  தடை செய்யக்கூடாது” என தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் காரணமாக எந்தவித சுமுக உடன்பாடும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் 4வது கட்டமாக கடந்த  ஜூலை 29ந்தேதி அன்று  டெல்லியில்  நடைபெற்றது. அதிலும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
இதுவரை 4 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
fisherman1
 நாளை,  ஐந்தாவது கட்ட பேச்சு வார்த்தை டில்லியில் நடைபெறுகிறது.
இந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள,  இலங்கையில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் பிரதநிதிகள் கொண்ட குழு டில்லிக்கு வருகிறது.
அவர்களுடன் பேச,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 13 பேர் கொண்ட குழு டில்லி செல்கிறது.
இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை சென்னையில் தமிழக மீனவ பிரதநிதிகள் கொண்ட குழுவுடன் இணைந்து,  தமிழக அரசு சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொண்டனர். கூட்டத்தில்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு செல்கின்றனர்.
நாளை  டெல்லியில் நடைப்பெறும் இருநாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையில் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் பங்கேற்கிறார்.
மீனவர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு அமைச்சர்கள் வட்டத்திலான பேச்சுவார்தை சனிக்கிழமை அன்று டில்லியில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில்  இலங்கை வெளியுறவுதுறை அமைச்சர் மற்றும் மீன்வளதுறை அமைச்சருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள  தமிழக மீனவர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிப்பது குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.
இந்த பேச்சு வார்த்தையிலாவது சுமூக உடன்பாடு ஏற்படுமா..?  என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.