குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை,

ஓகி புயல் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் ஏராளமானோர் இன்னும் மீட்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பகுதி மீனவர்கள் ஆர்பாட்டம் நடத்துகின்றனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக சென்னை கடற்கரை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை உள்வட்ட சாலையில் வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் நொச்சிக்குப்பம் மீனவர்கள் குமரி மாவட்ட மீனவர்களை மீட்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, புயல் காணமாக இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத்தை அதிகரித்து தர வேண்டும் என்றும், புயல் காரணமாக வெளிநாடு களில் தத்தளித்து வரும் தமிழக மீனவர்கள் விரைவாக மீட்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

‘தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fishermen protest in Chennai for supporting Kumari district fishermen!, குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
-=-