ஈரானுடன் வர்த்தகம் தொடர புதிய வழிமுறை…5 நாடுகள் வலியுறுத்தல்

 

வாஷிங்டன்:
ஈரானுடன் வர்த்தகம் தொடர புதிய வழிமுறைகளை உருவாக்க 5 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஈரானிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரித்திருந்தது.

இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பெடரிகா மொஜர்னி கூறுகையில்,‘‘ஈரானுடன் ஏற்றுமதி செய்யவும், சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடரும் வகையில் சிறப்பு வழி முறைகளை உருவாக்க வேண்டும்’’ என்றார்.