சேலம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் எரிந்து சாம்பலான பரிதாபம்…

சேலம்: சேலம் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த  5 பேர் எரிந்து சாம்பலான பரிதாபம் நிகழ்ந்துள்ளது. அது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உளளது.

சேலம் அருகே உள்ள  குரங்குச்சாவடி பெருமாள் மலை அடிவாரத்தில் வசித்து வருபவர் அன்பழகன்,  இவர் அந்த பகுதியில், மர அரவை மில்  நட்த்தி வருகிறார். இவர், இவரது தம்பி, மற்றும்  மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

நேற்று வீட்டில், அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென வீடு தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.  தீமளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இந்த விபத்தின்போது, வீட்டில் கீழே உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். மற்றவர்களும் எழுந்து வருபவர்கள், தீயில் சிக்கினர். அவர்கள் அலறல் சத்தம் பேட்டு, அக்கம்பக்கத்தினரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  தீயணைப்பு  துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த தீ விபத்தில், அன்பழகன் தம்பி  கார்த்திக் , மகேஸ்வரி, முகேஷ் , சர்வேஷ், புஷ்பாஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர்.

விபத்தின்போது, மற்றொரு அறையில்  படுத்து இருந்த அன்பழகன் மற்றும் அவரது பெற்றோர் சேட்டு, அமுதா ஆகியோர் லேசான தீக்காயத்துடன்  உயிர் தப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக  தீ விபத்து நடந்திருக்கலாம் என  தெரிய வந்து உள்ளது

தீயில் கருகி உயிரிழந்த அனைவரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்து சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பெரும்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.