பில்வாரா:

ராஜஸ்தான் மாநிலத்தில் துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அல்வா சாப்பிட்டதில் 5 பேர் பரிதாபக உயரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புட்டேலா டவுன் பகுதி அருகே உள்ள சந்திவாலா கிராமத்தில், விபத்து காரண மாக  மரணம் அடைந்த பலூர் மனூர் என்ற  5வயது சிறுவனின் மரணம் குறித்து விசாரிக்க வந்த அவரது உறவினர்களுக்கு அல்வா கொடுக்கப்பட்டது.

அல்வா சாப்பிட்ட  சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மேலும், வயிற்று வலியால் துடித்தனர். இதையடுத்து அவர்களை  பிலாப்பூர் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் 5 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும்  3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த கங்காபூர் போலுஸ் சூப்பரிடென்ட்  கோவர்தான் லால் கூறும்போது, இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உயிரிழப்புக்காரணமான அல்வாவை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  அல்வா புட் பாய்சனாக மாறியது எப்படி என்பது குறித்தும், இதற்கு ஏதேனும் சதி காரணமாக இருக்கலாமா என்ற வகையிலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறி உள்ளார்.