Random image

பள்ளி இறுதி படிப்பை முடிக்காத பைலட்டுகள் : பாகிஸ்தானில் அவலம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் விமான நிறுவனத்தில் பள்ளி இறுதி  படிப்பை முடிக்காத ஐவர் விமான ஓட்டிகளாக பணி புரிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் நாட்டின் அரசு விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்வேஸ் பல வருடங்களாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.   இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவில் அந்த நிறுவனம் மொத்தம் ரூ.36000 கோடி நஷ்டத்தில் இருந்துள்ளது.   அரசு அந்த நிறுவனத்தை விட எண்ணாததால் தொடர்ந்து நடத்தி வருகிறது.

சென்ற மாதம் பாகிஸ்தான் அரசு இந்த நிறுவனத்துக்கு ரூ.1700 கோடி நிதி உதவி அளித்தது.    ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் அரசுக்கு இது மேலும் சுமையாக ஆகி உள்ளது.   இந்நிலையில் இந்த விமான நிறுவனத்தின் ஊழியர்களின் விவரங்கள் குறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அமர்வு ஆராய்ந்து வருகிரது.

அந்த ஆய்வில், இந்த விமான நிறுவனத்தின் 4321 பேருடைய கல்வி ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளன.   இன்னும் 421 ஆவணங்கல் சரிபார்க்கப்பட உள்ளன.    ஆவணங்கள் அளிக்காத 50 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..

விமான ஓட்டிகளில் 7 பேர் பொய்யான கல்வி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.   இந்த நிறுவனத்தின் விமான ஓட்டிகள் பள்ளி இறுதிப் படிப்பை முடிக்காதவர்கள் ஆவார்கள்.  ஒரு வாகனத்தை செலுத்தவே பள்ளி இறுதிப் படிப்பு தேர்ச்சி அவசியம் என்னும் நிலையில் இவர்களுக்கு விமான ஓட்டி உரிமம் மற்றும் பணி அளித்தது குறித்து அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.