சாதித்த ராகுல்!: இராமசுகந்தன் புகழாரம்!

ந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகரும் ஏ.ஐ.சி.சி. உறுப்பினருமான வாழப்பாடி கே.இராமசுகந்தன், “சாதித்த ராகுல்காந்தி” என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அன்னை சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி ஏற்றபோது காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலத்தில் மட்டுமே ஆட்சி புரிந்து வந்தது , ஆனால் அதற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியை மத்தியிலும் பல மாநிலங்களில் ஆட்சி பிடிக்கும் அளவுக்கு அவருடைய தலைமை அமைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சென்ற வருடம் ஏறக்குறைய இதே நாளில் பதவியேற்றார் அப்போது பஞ்சாப், மிசோரம் , பாண்டிச்சேரியில் மற்றும் கர்நாடகத்தில் ஆட்சிபுரிந்து வந்தோம். அவர் தலைமை ஏற்றபோது குஜராத் தேர்தலில் வெற்றிக்கு அருகே காங்கிரஸ் கட்சியை இட்டு சென்று , தன்னுடைய பிரச்சார உத்திகள் முலம் காங்கிரஸ் கட்சியை குஜராத் மாநிலத்தில் மீண்டும் பலம் வாய்ந்த கட்சியாக கொண்டு வந்தார். அவருடைய குஜராத் தேர்தல் யுக்தியை பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் பின்பற்றினர்.

பிஜேபியின் தலைவர்கள் ,பிரதமர் உட்பட தேர்தல் பிரச்சாரங்களில் போது தலைவர் ராகுல் காந்தியும் அவருடைய குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசிய போதும் கண்ணியத்தோடு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு அரசியல் ரீதியாக மட்டுமே எதிரிகளை விமர்சித்து வந்தார் .

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக வசம் இருந்த மூன்று பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அபார வெற்றியை தேடிக் கொடுத்தது தலைவர் ராகுல் காந்தி அவர்களுடைய பிரச்சார யுக்தி மற்றும் அவருக்கு உறுதுணையாக பல்வேறு நிலைகளில் இருந்து செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை நான் இன்று பாராட்டி மகிழ்கிறேன். இதே உத்வேகத்தோடு வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்த்திட நாம் பணியாற்றிட வேண்டும் . இந்த நாளில் நாம் அனைவரும் சூளுரைப்போம்” இவ்வாறு தனது அறிக்கையில் வாழப்பாடி கே. இராம சுகந்தன் தெரிவித்துள்ளார்.