Random image

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர், ஷரபோவா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸின் நான்காவது சுற்றில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர், மரியா ஷரபோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். இருவரும் தடுமாற்றத்துடன் விளையாடவே போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

roger-federer

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் நடந்து முடிந்த 3வது சுற்றில் ரோஜர் பெடரர், ஜோகோவிச் மற்றும் ஷரபோவா அடுத்த சுற்றிற்கு முன்னேறினர். ஆண்கள் பிரிவில் 3 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்து வீரர் ரோகர் பெடரர் மூன்றாவது சுற்றில் 6-4,6-1,7-5 என்ற புள்ளிகளில் ஆஸ்திரேலியா வீரரை வீழ்த்தி 17வது முறையாக 4வது சுற்றிற்கு முன்னேறி இருந்தார்

இந்நிலையில் இன்று, உலக தரவரிசையில் 2-வது இடத்திலும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான ரோகர் பெடரர் 4-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான்மில்மேனை எதிர்த்து போட்டியிட்டார். முதல் செட்டை பெடரர் 6-3 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த சுற்றுகளில் பெடரருக்கு கடினமாகவே அமைந்தன. மில்மேன் போராடி 7-5 என இரண்டாம் சுற்றை கைப்பற்றினார். முதல் இரு செட்களிலும் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்றனர்.

அடுத்த செட்களில் பெடரர் தடுமாறவே, எழுச்சிக் கொண்ட மில்மேன் அடுதடுத்த நடந்த இரு செட்களையும் 7-6, 7-6 என கைப்பற்றினார். இதனால் முன்னணி வீரரான ரோகர் பெடரர் தோல்வியை சந்தித்தார். அதே சமயம், மில்மே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றார். 4வது சுற்றில் பெடரரை 3-6, 7-5,7-6(9-7),7-6(7-3) என்ற புள்ளிகளில் வீழ்த்தி மில்மேன் வெற்றிப்பெற்றார். இதையடுத்து அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பெடரரை முதல் முறையாக மில்மேன் வீழ்த்தி இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியாவின் சார்பில் 2006க்கு பின் முதல் முறையாக அமெரிக்க ஓபன் காலிறு சுற்றுக்கு மில்மேன் முன்னேறியுள்ளார் . இவர் காலிறுதியில், மற்றொரு முன்னணி வீரரான நோவாக் ஜோகோவிச்சை சந்திக்க உள்ளார்.

Maria-Sharapova

இதே போன்று இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவின் 4-ம் சுற்றில், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், ரஷ்யாவைச்,சேர்ந்தவருமான மரியா ஷரபோவா, ஸ்பெயினின் கர்லா சுவரேச் நவர்ரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், துவக்கத்திலேயே ஷரபோவா தடுமாறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நவர்ரோ 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மரியா ஷரபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றிற்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம், அமெரிக்க ஓபன் டென்னிசின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இருந்து மரியா ஷரபோவா வெளியேற்றப்பட்டுள்ளார்.