ஜோர்டான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 11 பேர் உயிரிழப்பு

ஜோர்டான் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jordan_flood

ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழதுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

பழமையான பாலைவன நகரமான பெட்ராவிற்கு சுற்றுலா வந்த சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த ஜோர்டான் நாட்டு ராணுவம் ஹெலிகாப்டர்களில் சென்று சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.

தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களாஇ மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.