தாத்தாவின் சொந்த ஊரில் கமலா ஹாரிசை வாழ்த்தி ‘பிளெக்ஸ்’ பேனர்கள்..

மெரிக்க குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கமலாவின் தாத்தா பி.வி.கோபாலன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவர், இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிவர்.

தங்கள் கிராமத்து பெண், கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் உயர் பதவிக்கு போட்டியிடுவது, துளசேந்திரபுரம் கிராம மக்களை குதூகலிக்க செய்துள்ளது.
சும்மா இருப்பார்களா?

நம்ம ஊர் வழக்கப்படி, துளசேந்திரபுரம் கிராமத்தில் கமலாவை வாழ்த்தி தெருவெங்கும் பிளெக்ஸ் பேனர்கள் வைத்து அசத்தியுள்ளனர்.

‘’சிங்கப்பெண்ணே!’’ என அந்த பேனரில் தலைப்பிட்டு, கமலாவை வாழ்த்தியுள்ள ஊர் மக்கள்’’ அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கமலா, இந்த கிராமத்துக்கு வந்துள்ளதாக தெரிவித்த ஊர் மக்கள் ‘’ தேர்தலில் அவர் நிச்சயம் வெல்வார். வெற்றிவாகை சூடிய பின் மீண்டும் எங்கள் கிராமத்துக்கு கமலா வருவார்’’ என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

-பா.பாரதி.