விமானம் மற்றும் விரைவு ரயில் பயணிகளுக்கு மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை

விமானம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்படட ஊரடககால் மின்சார ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்ட்து. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இப்போது அரசு மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் மின்சார ரயில்களில் பயனையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் தற்போது மின்சார ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

விமானப்பயணம் மற்றும் விரைவு ரயில்கள் பயணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர் உள்ளூரில் பயணம் செய்ய சிரமம் பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “தற்போது அரசு ஊழியர் மற்றும் அத்தியாவசிய பணி புரிவோருக்கு புகைப்பட அடையாள அடடையை காட்டி டிக்கட் வாங்க அனுமதிக்கப்படுகிறது. அவ்வகையில் இனி விமானம் மற்றும் விரைவு ரயில் பயணிகள் தங்கள் பயண தினத்தன்று மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.