செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணிப்பெண் கைது

airhostess

சித்தூரில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட விமான பணி பெண்னை  காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் கடந்த 2014ம் ஆண்டு செம்மரக்கடத்தில் ஈடுபட்டு வந்த லட்சுமண் என்பவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லட்சுமணனின் இரண்டாவது  மனைவியான சங்கீதா சாட்டர்ஜியின் மூலம் செம்மரக்கடத்தல் வியாபாரிகளிடம் பணப்  பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  சங்கீதாவை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அவரை  காவல்துறையினர் கொல்கத்தாவில் கைது செய்தனர். இவர் மாடலிங் செய்துகொண்டிருந்ததோடு விமானப்பணிப்பெண்ணாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.