Random image

ஆட்டோ கட்டணத்தை விட விமான கட்டணம் குறைவு : மத்திய அமைச்சர்

கோரக்பூர்

ற்போது ஆட்டோ கட்டணத்தை விட குறைவான அளவில் விமானக் கட்டணம் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் ஒரு விமான நிலையம் உள்ளது.   இங்கு புதிய உள்நாட்டு விமான முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.   இந்த கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது.  இதில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்துக் கொண்டு திறந்து வைத்து உரையாற்றினார்.

ஜெயந்த் சின்ஹா தனது உரையில், “பிரதமர் மோடியின் தலைமையில் விமானப் போக்குவரத்துத் துறை அபரிதமாக வளர்ந்துள்ளது.  பயணிகள் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது.  கடந்த 2013 வரை விமானத்தில் சுமார் 6 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.   தற்போது 2018ல் அது இருமடங்காகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விமானக் கட்டணம் குறைவாக உள்ளதே ஆகும்.   ஆட்டோ கட்டணத்தை விட விமானக் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது.  உதாரணமாக ஆட்டோவில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல இருவருக்கு ரூ.10 ஆகிறது.  அதாவது ஒருவருக்கு கிமீக்கு ரூ. 5 கட்டணம் ஆகிறது.   ஆனால் விமானத்தில் ஒரு கிமீக்கு ரூ. 4 மட்டுமே வசூலிக்கப்படுகிறது” என கூறினார்.

அவருடைய இந்த ஆட்டோ – விமான ஒப்பீடு பார்வையாளர்கள் இடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.