துபாய்:

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு அடிக்கடி “வாயு” பிரிந்ததால் ஏற்பட்ட பிர்சினையை அடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது. துபாயிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்று கொண்டிருந்து,

ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் விமானம். இதில் பயணி ஒருவருக்கு அடிக்கடி “வாயு” பிரிந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அருகில் பயணித்தவர் அவரிடம் சண்டையிட்டார்.

இருவருக்குமிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. விமானப்பணிப்பெண்களால் இருவரின் சண்டையை சமாளிக்க முடியவில்லை. இதையடுத்து விமானம் அவசரமாக ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் ஆஸ்திரியா காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட இரண்டு பயணிகள் மற்றும் அவர்களுடன் பயணித்த இரண்டு பெண்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இதனால் சிறிது நேரம் தாமதமாக விமானம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நால்வரும், வேறு விமானம் மூலம் வியன்னாவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று ட்ரான்சாவியா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது