அதிகரிக்கும் கொரோனா தொற்று: வரும் 6ம் தேதி முதல் விமான சேவை ரத்து என கொல்கத்தா விமான நிலையம் அறிவிப்பு

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் வரும் 6-ம் தேதி முதல் 19 வரை விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசு அனுமதியுடன் சில விமானங்கள் மட்டும் தான் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்கவும், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலார்களை மீட்கவும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு வங்க அரசு, மாநிலங்களுக்கு இடையேயான விமான சேவையை ஜூலை 6 முதல் 19 வரை ரத்து செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், அகமதாபாத்துக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவுவதால், மேற்கு வங்க அரசின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கொல்கத்தா விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் மேற்கு வங்கம் 6வது இடத்தில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி