புதுச்சேரியில் இருந்து தாய்லாந்திற்கு விமான சேவை தொடக்கம்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக்கிற்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

pondy

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், புதுச்சேரியிலிருந்து தாய்லாந்திற்கு ஹைதராபாத் வழியே செல்லும் முதல் விமான சேவையை முதன் முதலாக இன்று தொடங்கியுள்ளது.

அதன்படி, காலை 11.45 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும் விமான மதியம் 1.20 மணிக்கு ஹைதராபாத்தைச் சென்றடையும். அங்கிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9.40 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சென்றடையும் என விமான சேவை நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.