கடும் பனி : டில்லியில் 90 விமான சேவைகள் பாதிப்பு!

டில்லி

டில்லியில் பொழிந்து வரும் கடும் பனியால் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகியது.

வட இந்தியா மாநிலங்கள் எங்கும் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது.    சுமார் 50 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் காண முடியாத அளவுக்கு டில்லியில் கடுமையாக பனிப்பொழிவு உள்ளது.    இந்த வருடத்தில் இவ்வளவு மோசமான பனிப்பொழிவு ஏற்பட்டதில்லை என சொல்லப்படுகிறது.

இந்தப் பனிப்பொழிவால் 54 உள்நாட்டு விமானங்கள் தாமதாமாகி உள்ளது.   இது தவிர 17 விமானங்கள் வேறு விமான நிலையத்துக்கு மாற்றப் பட்டுள்ளன.   சர்வதேச விமானங்களில் 8 விமானங்கள் தாமதமாகி உள்ளது.  8 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.   இதுவரை மூன்று உள்நாட்டு விமான சேவைகளும் ஒரு சர்வதேச விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்த விவரங்கள்   அனைத்து விமான நிலையங்களின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.