நவம்பர் முதல் புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் தொடக்கம்

புதுச்சேரி

புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவை நவம்பர் முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

புதுச்சேரி விமான நிலையம் லாஸ் பேட்டையில் உள்ளது.  கந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டது.  ஆயினும் புதுச்சேரி அரசு தீவிர முயற்சி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இங்கிருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.

உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு விமான நிலையங்கள் மூடப்பட்டன.  அவ்வகையில் புதுச்சேரி விமான நிலையமும் மூடப்பட்டது.   தற்போது டில்லி, பெங்களூரு, சென்னை போன்ற சில நகரங்களில் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் முதல் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.    புதுச்சேரியில் இருந்து  ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்க விரைவில் மத்திய அரசு விமானத்துறை ஒப்புதல் வழங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.