“ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட விமான பயணச்சீட்டு முன்பதிவு-திரும்ப வழங்கப்படும்” – உச்ச நீதிமன்றத்தில் டிஜிசிஏ தகவல்

புதுடெல்லி:
ரடங்கு காலத்தில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்ச நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை முழுமையாக திருப்பி அளிக்கக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது,.

அப்போது, மே 24 வரை பயணம் செய்வதற்காக பொதுமுடக்கத்துக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணச்சீட்டுக்கான தொகை சம்மந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவு கணக்கில் வைக்கப்படும் என்றும் அந்த தொகையை பயணிகள் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்தது.

பொது முடக்க காலத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கான தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது,. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவைப்பிரிவு முடிவெடுக்கும் எனவும் நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியது,. இதனை தொடர்ந்து விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.