ரூ.1001க்கு விமான பயணம்! ஜெட் ஏர்வேஸ் புத்தாண்டு சலுகை

டில்லி,

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ரூ.1001க்கு புத்தாண்டு விமான பயண சலுகை அறிவித்து உள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 64 வழித்தடங்களில் விமானப் பயணத்தினை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அளித்து வருகிறது.

2018ம் ஆண்டு பிறப்பதையொட்டி, புத்தாண்டு விற்பனையாக 1001 ரூபாய்க்கு விமான டிக்கெட் சலுகையினை  11 நாட்களுக்கு அறிவித்துள்ளது.

இதன்படி  டிசம்பர் 23 முதல் ஜனவரி 2 வரை சலுகை விலையில் டிக்கெட் டிக்கெட் புக் செய்து 2018 ஜனவர் 15 முதல் விமானப் பயணம் செய்யலாம் என்றும் கூறி உள்ளது.

15 சதவீத சலுகை உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான டிக்கெட் புக் செய்யும் போது 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை 44 வழித்தடங்களில் சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும்.

ரூ. 1,001 சலுகை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டேராடூன் – ஸ்ரீநகர் வழியாகப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு 1,001 ரூபாய் முதல் குறைந்த காலச் சலுகையாக டிக்கெட் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சலுகைகள் குறித்து மேலும் அறிந்துகொள்ள www.jetairways.com இணையதளம்  அல்லது 39893333 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகை விலை டிக்கெட்கள் எக்கானமி, பிரியர் பயண வகுப்புகள் போன்றவற்றில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.