பெங்களூர்

ந்தியாவின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனங்களில் ஒன்றான ஃபிளிப்கார்ட், இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தள நிறுவனம் பிளிப்கார்ட். 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆன்லைன் ஸ்டோர் 2008ம் ஆண்டு முதல் தனது வணிகத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது. 2010 முதல் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததில் இருந்து அதன் வியாபாரம் பன்மடங்கு பெருகியது.

இதற்கிடையில் அமேஷான் போன்ற மற்ற ஆன்லைன் நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் தற்போது இபே என்ற மற்றொரு ஆன்லைன் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பிளிப்கார்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்துடனான போட்டியை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லை கடந்து வர்த்தக உறவை இணைந்து மேற்கொள்வது தொடர்பாகவும் இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இபே, டென்சன்ட், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 140 கோடி அளவுக்கான  அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளன.