சார்ஜர் எரிந்து செல்போன் நாசம்!! பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்

ஐதராபாத்:

கோளாறு உள்ள சார்ஜரை விற்பனை செய்து செல்போன் சேதத்திற்கு காரணமான பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் அகமது அக் இர்பானி என்பவர் ஆன்லைன் வணிகம் மூலம் பிலிப்கார்ட் நிறுவனத்தில் ரூ. 259க்கு மொபைல் சார்ஜர் ஒன்றை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கினார். இந்த சார்ஜரில் தனது மொபைல் போனை டாக்டர் சார்ஜ் போட்டார்.

சார்ஜ் போட்ட 10வது நிமிடத்தில் சார்ஜர் தீ பிடித்து எரிந்தது. இதில் செல்போனும் சேதமடைந்தது. இது குறித்து பிலிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் செய்தார். அவர்கள் மாற்று சார்ஜர் வழங்க முன் வந்தனர். ஆனால் செல்போன் சேதத்திற்கு மின் கசிவு அல்லது உயர் மின் அழுத்தம் தான் காரணம் என்று கூறி பொறுப்பேற்க மறுத்துவிட்டனர்.

விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் இடையில் நாங்கள் முகவர் மட்டுமே என்று பிலிப்கார்ட் தெரிவித்தது. 100 முதல் 240 லே £ல்ட்ஸ் மின் அழுத்தம் தாங் கூடியது சார்ஜர் என்று அதில் குறிபிப்பிடப்பட்டுள்ளது.

செல்போன் சேதத்துக்கு இழப்பீடு தர மறுத்ததை தொடர்ந்து ஐதராபாத் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் இர்பானி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ரூ. 15 ஆயிரம் அபராதமாக இர்பானிக்கு பிலிப்கார்ட் வழங்க உத்தரவிட்டது. விற்பனை செய்யப்பட்ட சார்ஜரு க்கு செல்போனுக்கு தொடர்பு உள்ளது.

கோளாறான சார்ஜரை விற்பனை செய்ததால் செல்போனுக்கு ஏற்பட்ட சேதத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் மன்ற நடுவர் கருத்து தெரிவித்தார்.