கே ஆர் பி அணை மதகு உடைந்தது : ஆற்றங்கரை ஓர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

திருவண்ணமலை

தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் பெண்ணை ஆற்றின் வெள்ளப் பெருக்கால் கிருஷ்ணகிரியில் உள்ள கே ஆர் பி அணையின் பிரதான மதகு உடைந்துள்ளது.  எனவே சுற்றி உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து இதனால் அதிகமாகி உள்ளது.

தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் எனவும்,  தென்பெண்ணை ஆற்றைக் கடக்கவோ ஆற்றில் குளிக்கவோ கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.