குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு

நெல்லை:

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கிருந்த மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் அருவி பகுதியில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.