மேட்டூர் : சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் எடப்பாடி பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கே எஸ் ஆர் அணைகள் நிரம்பி வருகின்றன. நீர் வரத்து மேலும் அதிகரித்து வருகிறது. அதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
இதை ஒட்டி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர் மட்டும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதை ஒட்டி மேட்டூர் மற்றும் எடப்பாடி பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் இந்தப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் இங்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடும் படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அது தவிர தங்கள் உடமைகள் கால்நடைகளை பத்திரமாக பாதுகாக்குமாறு அறிவுரை அளித்துள்ளார்.