காவிரியில் வெள்ளப்பெருக்கு.கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்.  மக்கள் பரிதவிப்பு!

 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போக்குவரத்து இன்றி தவிக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது

இதனால் கர்நாடக அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32,421 கன அடியாகவும், திறப்பு 500 கன அடியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் தற்போதயை நீர் இருப்பு நிலவரம் 14.83 டிஎம்சியாக உள்ளது. நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கிராமங்களுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையிலிருந்து விசைப்படகு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எமனூர், ஓட்டனூர், நாகமரை பகுதிகளுக்கு விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போக்குவரத்து இன்றி தவித்து வருகிறார்கள்.