வெள்ள பாதிப்பு: தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

சென்னை,

மிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மத்திய அரசு கூடுதல் நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  திருநாவுக்கரசர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பருவமழை காரணமாக  மாநிலம் முழுவதும் தற்போது பெய்து வரும்கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையிலான முன்னேற்பாட்டு நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. ஆட்சியைக் காத்துக்கொள்வதிலும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதிலுமே முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களின் கவனமும் உள்ளது.

தமிழக முதல்வருக்கு மக்கள் தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து பிரதமரிடம் கேட்க நேரமில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிதி உதவிகளை தடையின்றி செய்ய வேண்டும். மேலும், மழை, வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மழை நிவாரணத் தொகையை அதிகளவில் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.