வெள்ள அபாயம்: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சேலம்:
காவிரியில் கரைபுரண்டு ஓடிவரும் தண்ணீர் காரணமாகவும், மேலும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், காவிரில் வெள்ளம் ஏற்படலாம் என கருதி, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில், கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியு உள்ள.ன. தற்போது கே.ஆர்.எஸ் அணையும் தனது முழுக்கொள்ளளவை எட்டி வருகிறது.
தற்போது மேட்டூக்கு வரும் நீரின் அளவு 45,000 கனஅடியில் இருந்து 46,210 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 79.45 அடியாக உயர்ந்துள்ளது. அ
ணையின் நீர்இருப்பு 41.41 டிஎம்சி.,யாகவும், அணையில் இருந்து குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் உள்ளது.
இந்த நிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.