ஈரோடு : நடு இரவில் வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீர்  மக்கள் அவதி

ரோடு

ரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில்நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

                                                  மாதிரி புகைப்படம்

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெரும் மழை பெய்வதால் கர்நாடகாவில் காவிரி அணைகள் நிரம்பி உள்ளன.   மழை நீர் முழுவதுமாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் மேட்டூர் அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

ஆகையால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி நதியில் 1.40 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.   அதனால் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி மற்றும் சத்திரப்பட்டி உள்ளிட பல பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.    இதனால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.   பாதிப்படைந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.   சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Flood water enters in houses at Erode district during yesterday midnight
-=-