ஜகார்த்தா:

கார்த்தாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று ஜகார்த்தாவின் பேரழிவு குறைப்பு மையத்தின் தற்போதைய தலைவர் சேப்டோ குர்னியாண்ட்டோ தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவில் கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பல பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளதால் ஏறத்தாழ 1,300 குடும்பங்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலை அடுத்த வாரம் வரை தொடரக்கூடும் என்று ஜகார்த்தாவின் வானிலை ஆய்வு மையம் மக்களை எச்சரித்துள்ளது.