நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி:

ர்நாடகாவில் நாளை மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக டிஜிபிக்கும் உத்தரவிட்டது.

கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவுக்கு கவர்னர் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று நடைபெற்ற காரசார விவாதத்தை தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், முகுல்ரோத்தகி மேலும் அவகாசம் கேட்டதை நிராகரித்தது.

மேலும் நாளை நடைபெற்ற   நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாக்கெடுப்பிற்கு வரும் அனைத்துகக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக டிஜிபி-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.