அமெரிக்காவின் புளோரிடாவில் எமர்ஜென்ஸி: கொடூரமாய் தாக்க வரும் ஹரிகேன் மேத்யூ

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கொடூரமான ஹரிகேன் மேத்யுவின் தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அம்மாகாணத்தின் ஆளுநர் ரிக் ஸ்காட் நெருக்கடிநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.

harricane

இது ஆகக் கொடூரமான பிரிவு – 4 வகை புயலாகும். காற்று மணிக்கு 140 மைல் வேகத்தில் வீசும், வரலாறு காணாத மழைப்பொழிவு இருக்கும். இதில் சிக்கியவர் தப்புவது இயலாத காரியம். புளோரிடா அரசு தன்னால் இயன்ற அளவு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 இலட்சம் மக்களை உடனடியாக வெளியேறும் படி புளோரிடா கவர்னர் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.ஏற்கனவே ஹைதி, ஜமைக்கா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகளைக் கடந்து வந்த ஹரிக்கேன் மேத்யூ அந்த இடங்களை துவம்சம் செய்ததுடன் 339 இற்கும் அதிகமான மக்களின் உயிரை காவு வாங்கியும் இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: florida gov scott issues state of emergency-for resources in case hurricane matthew hits
-=-