புளோரிடா:

தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இல்லங்களில் நடத்தப்படும் மத சேவைகள் போன்றவை அவசியம் அல்ல என்றும், எனவே இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட முதல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவு வெள்ளிக்கிழமை அதிகாலை 12:01 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.

2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, மாநிலத்தில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.  புளோரிடாவில் இதுவரை 6,946 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதுடன், 86 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமையன்று, புளோரிடா ஷெரிப்-பின் பிரதிநிதிகள் அரசு உத்தரவை மீறி மத சேவைகளில் ஈடுபட்ட சுவிசேஷ போதகரைக் கைது செய்தனர். இதுகுறித்து ஹில்ஸ்போரோ கவுண்டி ஷெரிப் சாட் க்ரோனிஸ்டர் தெரிவிக்கையில், ஹோவர்ட்-பிரவுன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சட்டவிரோத மத கூட்டம் நடத்தியது மற்றும் சுகாதார அவசரகால விதிமுறைகளை மீறியது போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வரும் நிலையில், ப்ளோரிடா கொரோனாவின் அடுத்த இலக்காக மாறலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது. அதற்கு ஒன்றிரண்டு காரணங்களல்ல, பல காரணங்களைக் கூற உள்ளன. ஆனால், அது சீக்கிரத்தில் அமெரிக்காவிலேயே அதிக கொரோனா நோயாளிகள் உள்ள இடமாக மாற வாய்ப்புள்ளது என கருதப்படுகிறது. கொரோனா பரிசோதனை செய்யும் வசதி இப்பகுதியில் குறைவாக உள்ளது. அப்படியே பரிசோதனை செய்தாலும், பரிசோதனை முடிவுகள் வர ஏழு முதல் பத்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.