புளோரிடா:

மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில்  நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள , ஸ்டோன்மேன் லக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. முன்னாள் மாணவர் ஒருவர் பள்ளிக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், 17 மாணவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சூடு குறித்த தகவல் அறிந்ததும், மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்தனர். தகவல் அறிந்த போலீசார் உடடினயாக சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். இதன் காரணமாக பதற்றம் தணிந்தது.

விசாரணையில், அந்த முன்னாள் மாணவர் பெயர்  நிகோலஸ் குரூஸ் என்பதும், அவர் சரியாக பள்ளிக்கு வராததால் அவரை பள்ளியில் இருந்து நீக்கி பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாகவும், அதன் காரணமாகவே கோபமுற்ற அந்த மாணவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது.

இது புளோரிடாவில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்தும்,  உயிரிழந்த வர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் கூறி உள்ளார்.