தேர்தல் ஆணையம் அசத்தல்: உ.பி.யில் வாக்காளர்களை மலர்தூவி மேளதாளத்துடன வரவேற்ற மாணவர்கள்…..(வீடியோ)

டில்லி:

நாடு முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில், உ.பி. மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை அந்த பள்ளி மாணவர்கள் என்சிசி உடையுடன் மலர்தூவி, மேலதாளம் இசைத்து விமரிசையாக வரவேற்றனர். இது பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

17வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புடன் 91 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன்  ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு  நடைபெற்று வருகிறது.

காலை முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் திரளா வந்து வாக்களித்து வருகின்றனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும்  உத்தர பிரதேசம் மாநிலம் பாக்பத் தொகுதியில், வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களை, அநந்த பள்ளியில் உள்ள என்சிசி மாணவர்கள் சீருடையுடன் வரிசையாக நின்று மலர் தூவி, மேளதாளம் இசைத்து வரவேற்றனர். உ.பி.மாநிலத்தில்  பாராவ்த் என்ற பகுதியில் உள்ள பூத் எண் 126ல் இந்த அதிசயம் நடைபெற்றது. இதைக்கண்ட வாக்காளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வீடியோ உதவி நன்றி: ANI

Leave a Reply

Your email address will not be published.