பிரசவ வலியால் துடித்த பெண்ணை தனது ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆளுநர்

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அருணாச்சலப் பிரதேச ஆளுநர் தனது ஹெலிகாப்டரை அளித்து உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

governer1

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அம்மாநில ஆளுநர் பிடி மிஷ்ரா சென்றார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேமா கண்டு மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் பேசிக்கொண்டிருந்ததை ஆளுநர் கேட்டுக் கொண்டிருண்டார். அப்போது, நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

பிரசவத்திற்காக அந்த பெண்ணை கௌஹாத்தியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஆனால் அடுத்த 3 நாட்களுக்கு தவாங்கில் இருந்து கௌஹாத்தி வரை ஹெலிகாப்டர் சேவை இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, பிடி மிஷ்ரா தான் வந்த ஹெலிகாப்டரில் கர்ப்பிணி பெண்ணை அனுப்பி வைக்க முன்வந்தார்.

ஆளுநரின் ஹெலிகாப்டரில் கர்ப்ப்பிணி பெண், அவருடைய கணவர், ஆளுநர் மிஷ்ரா மற்றும் இரு அரசு அதிகாரிகள் பயணித்தனர். பாதிதூதரம் சென்ற நிலையில் எரிபொருள் நிரப்பதால் ஹெலிகாப்டர் அசாமில் உள்ள தேஸ்பூரில் நிறுத்தப்பட்டது. அப்போது ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டரை வரவழைத்து, அந்த கர்ப்பிணி பெண்ணையும், அவரது கணவரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அதன்பின்னர் மற்றொரு ஹெலிகாப்டரில் ஆளுநர் புறப்பட்டு சென்றார்.

மனிதாபிமானத்துடன் ஆளுநர் செய்த இந்த உதவி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.