காசி

த்திரப்பிரதேச மாநிலம் காசி நகரில் கட்ட்ப்பட்டுக் கொண்டிருக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்துக்களின் புனித நகரான காசிஉத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது .  இதை வாரணாசி எனவும் அழைக்கின்றனர்.   இங்கு ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.   அந்த மேம்பாலம் இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்கிடையே சிக்கிய கட்டுமானத் தொழிலாளர்களில் 12 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர்.  மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர்.   அவர்களின் நிலை என்ன என தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு உடனே சென்று மிட்புப் பணிகளை பார்வை இடுமாறு உ.பி, அமைச்சர்களான சித்தார்த் நாத் சிங், மற்றும் கேசவ் மௌரிய பிரசாத் ஆகியோருக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார்    மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.