மேம்பாலப் பணி: இன்று இரவு தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் ரத்து!

சென்னை:

ழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால், இன்று இரவு தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய மேம்பா நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி இன்று   கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வந்துசெல்லும் 10 மற்றும் 11 ஆகிய நடைமேடையில் புதிதாக மேம்பால நடைமேடை அமைக்கப்பட்டுவருகிறது. இதற்காக இன்று இரவு 6 மணி நேரம் இரு நடைமேடையிலும் ரயில் சேவை நிறுத்தப்பட உள்ளது.

கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – கடற்கரை ஆகிய இருமார்க்கங்களில் இருந்து புறப்படும் ரயில்கள் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை காலை 5.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே வேலையில் செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.