வட மாநிலங்களை வாட்டியெடுக்கும் பனிமூட்டம்: டெல்லியில் ரயில், விமான சேவைகள் தாமதம்!

டெல்லி:

ட மாநிலங்களில் அதிகரித்து வரும் பனிமூட்டம் காரணமாக தலைநக்ர  டெல்லியில் ரயில், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல விமானங்கள் அருகில் உள்ள நகரங்களில் தரையிறங்கவும், பல ரயில்களின் வருகை தாமதமாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும் 19 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் தொடர்ந்து வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது.  அதிகாலை காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் ரத்தத்தை உறைய வைப்பது போல உள்ளது.

இதனால் சாலையில் வாகனங்கள் விளக்குகளை எரியவிட்டு, மெதுவாக பயணித்து வருகின்றன. பனி மூட்டம் காரணமாக விமானம் தரையிறங்குவதில் பிரச்சினை உள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல,  ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி நோக்கி வந்து கொண்டிருக்கும், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜி.டி. எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 19 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.