சென்னை:

பரிமலைக்கு பெண்கள் செல்ல பாதுகாப்பு வழங்கிய கேரள அரசுக்கு எதிர்ப்பபு தெரிவித்து சென்னையில் உள்ள   கேரள டூரிசம் அலுவலகம் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட்ட கேரள அரசு அலுவலகம்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள  கிரீம்ஸ் சாலையில் கேரள அரசுக்கு சொந்தமான சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு  இரவு உருட்டுக் கட்டை களுடன் வந்த 15 பேர் கும்பல், கேரள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடிகளை அடித்தும், கற்களை வீசித் தாக்கியும் நொறுக்கியது.

இதைத்தொடர்ந்து  தாக்குதலுக்கு உள்ளான அலுவலக கட்டிடத்திற்கு 200க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மேலும் மாநிலத்தில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான அலுவலகங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை  கேரள அரசு காவல்துறையினர்  புறவாசல் வழியாக திருட்டுத்தனமாக அழைத்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். \ இந்த தாக்குதல் தொடர்பாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதி இந்து முன்னணி செயலாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.