சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்விலும் குளறுபடி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி பருவ மாணவர்களுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வின்போது,  தொழில்நுட்ப கோளாறு, ஏராளமான மாணவர்கள் தேர்வை எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நேற்று சென்னை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் மாதிரி தேர்வும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடை பட்டுள்ள நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வி லும் குளறுபடி நடைபெற்றுள்ளது, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இறுதி செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், யுஜினி வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் உள்ள  அனைத்து பல்கலைக் கழகங்களும், இறுதி செமஸ்டர்  தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவதாக அறிவித்து உள்ளன.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லூரிகளில் வருகிற 24-ம் தேதி முதல் ஆன்லைனில் இறுதி பருவ தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, 2 நாட்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கவே அறிவித்து இருந்தது.

அதன்படி,  இன்று நடைபெற்ற மாதிரி தேர்வின்போது,   தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல மாணவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  40% அளவிலான மாணாக்கர்கள்,   தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இணையதளத்திதை லாகின் செய்யும்போதே எரர் வருவதாகவும்,  இணையதள பக்கம் பாதியி லேயே நின்று விடுவதாகவும், வினாத்தாள்களை விரைந்து பதிவிறக்கம் செய்யமுடியவில்லை என்றும் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

ஆன்லைன் தேர்வு குளறுபடி காரணமாக மாணாக்கர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.