புதுடெல்லி: விண்வெளிக்கு இந்தியா சார்பில் மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு உணவாக, இட்லி, புலாவ் மற்றும் உப்புமா உள்ளிட்ட மொத்தம் 30 வகையான உணவுகள் தயாரிக்கப்படுவதாய் இஸ்ரோவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ககன்யான் திட்டத்திற்கு அரசின் சார்பில் ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வரும் 2022ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

இந்தப் பயணத்திற்காக தகுதிவாய்ந்த 4 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் விண்வெளியில் சென்று உண்பதற்காக மொத்தம் 30 வகையான உணவுகள் தயார் செய்யப்படுகிறதாம். மைசூரில் தனது தலைமையகத்தைக் கொண்ட உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தின் மூலம் இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

அந்தப் பட்டியலில், இட்லி, சாம்பார், உப்புமா, புலாவ், காய்கறி, முட்டை ரோல்ஸ், வெஜ் ரோல்ஸ்இ பாசி பருப்பு ஹல்வா உள்ளிட்ட பலவித ஐயிட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உணவுகளோடு, சுடவைத்து சாப்பிட ஹீட்டரும் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.