Random image

”சாப்பாடுதான் முக்கியம்..'” தெறிக்கவிடும் மழலையின் வைரல் வீடியோ

ங்கம் முக்கியமா, சாப்பாடு முக்கியமா என்ற கேள்விக்கு ”சாப்பாடுதான் முக்கியம்..'”  என்று  சொல்லும் பிஞ்சு மழலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ சமூக வலைதளமான யுயூபில் மழலைகளின் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் குழந்தை ஒன்று தனது மழலை குரலில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,  ஒருவர், உனது தந்தையிடம் சென்று ரூ.2000 வாங்கி வா என்று கூறுகிறார். அதற்கு அந்த குழந்தை சரி என்று தலையாட்டிவிட்டு செல்கிறார்… அபோது மீண்டும் அந்த குழந்தையிடம்… ”நீங்க இளைஞரணி சங்கத்துல சேர்த்துட்டீங்க, சங்கத்துக்குப் பணம் வாங்கி வா” என்று கூற, அந்தச் சிறுவன் சங்கம் என்றால் என்ன என்று தெரியாத நிலையில்… மீண்டும் அவர், ”எங்கே செல்கிறாய்?” என்று கேட்க, ”சாப்பிட்டு வர்றேன்” என்று அந்த மழலை அங்கிருந்து நகர முயற்சி செய்கிறது.

ஆனால், அந்த நபரோ, சிறுவனிடம் ‘சங்கம் முக்கியமா? சாப்பாடு முக்கியா?” என்று கேட்க, அந்தச் சிறுவன், ”சாப்பாடுதான் முக்கியம்.. அப்ப பசிக்கும்ல சாப்பிடக்கூடாதா?” என்று அழுகை கலந்து மழலை மொழியில்  எதிர் கேள்வி கேட்கிறான்.

தற்போது இந்த  வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.