பேஸ்புக் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்!!

சான்பிரான்சிஸ்கோ:

பேஸ்புக் மூலம் உணவு வகைகளையும் ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் தற்போது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பயனாளர்கள் தங்களது செல்போனில் உள்ள பேஸ்புக் செயலி மூலம் உணவு வகைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்காக இனி குறிப்பிட்ட உணவகங்களின் தனியான செயலி அல்லது இணையதளத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் இந்த வசதி முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பய்னபடுத்த பயனாளர்கள் தங்களது பேஸ்புக் செயலியில் இருக்கும் ஹாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.

கடந்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் நிறுவனம் டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களுடன் இணைந்தது. இந்த வசதி அடுத்த கட்ட நடவடிக்கை தான் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: food ordering facility introduce in facebook app, பேஸ்புக் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்
-=-