டெல்லி:
கொரோனா ஊரடங்கால் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில், அடுத்த சில மாதங்களில் ப உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.

இன்று காலை செய்தியளார்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர், பல்வேறு நிதி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பொருளாதா பேரிப்பு காரணமாக இந்தியாவில், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிவித்தவர்,  கொரோனா வைரஸ் தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
மானாவாரி சாகுபடியின் பரப்பளவு 44% உயர்ந்துள்ளது. உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளையில், ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
வேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
உணவு தானிய உற்பத்தி 3.7 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.