உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு…!

டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் பல்வேறு சேவைகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந் நிலையில் இன்று விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. 2 மணிநேரத்திற்கு குறைவாக பயண நேரமுடைய உள்நாட்டு விமானங்களில் உணவு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.