புனே

ணவு விடுதிகளைக் குறித்து தவறாக அவற்றின் பெருமையைக் குலைக்கும் வகையில் இணைய விமர்சனம் செய்வோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது எந்தப் பொருளை வாங்குவது என்றாலும் அந்த விற்பனையாளர்கள் மற்றும் பொருட்களைக் குறித்த விமர்சனங்களை இணையத்தில் பார்த்த பிறகே வாங்குவது வழக்கமாக உள்ளது.     ஒரு சிலர் அனைத்து விமர்சனங்களையும் படித்து ஆய்ந்து வாங்கி வந்தாலும் பலர்  அந்த விமர்சனங்களில் ஒன்று தவறாக இருந்தாலும் வாங்குவது இல்லை.   இந்நிலை பொதுவாக உணவு விடுதிகளில் அதிகம் நிலவி வருகிறது.

உணவு விடுதிகளைக் குறித்து பலர் தங்கள் இணையப் பக்கங்களில் விமர்சனங்கள் எழுதி வருகின்றனர்.   இவற்றில் ஒரு சில விமர்சனங்கள் இந்த உணவு விடுதி படு மோசம் எனவும் இந்த உணவு விடுதிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது போலவும் அமைந்து விடுகிறது.  இவ்வாறு உணவு விமர்சகர்கள் பலருடைய விமர்சனங்களால் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களை இழப்பது அதிகமாகி உள்ளது.

இது குறித்து  இந்திய விருந்தோம்பல் குழு என்னும் அமைப்பு தற்போது புனே நகரில் உள்ள உணவு விமர்சகர்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.  இதில் தவறுதலாக விமர்சனம் செய்த இணைய விமர்சகர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த குழுவின் தலைவர் சனி அவ்சர்மேல், “புனே நகரில் மட்டும் இது போல் 500 உணவு விமர்சகர்கள் உள்ளனர்.  இவர்களில் 25% பேர் மட்டுமே உண்மையான விமர்சகர்கள் ஆவார்கள்.

ஒரு பொறியாளர் அல்லது ஐடி நிறுவன அதிகாரியால் எப்படி ஒரு உணவை விமர்சிக்க முடியும்.   இது ஒரு நோயாளிக்கு மருத்துவருக்குப் பதில் பொறியாளர் சிகிச்சை அளிப்பது போல் ஆகும்.   எங்கள் அமைப்பு விமர்சகர்களுக்கு எதிரானது இல்லை.   ஆனால் தங்கள் விமர்சனத் திறமையைத் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிரானது ஆகும்.    சரியான விமர்சனம் அளிப்போருக்கு நாங்கள் சான்றிதழ் அளிக்க உள்ளோம்.  தவறான விமர்சனம் அளிப்போர் மீது மேலும் வழக்குகள் பாயும்” எனத் தெரிவித்துள்ளார்.