கொரோனாபரவலை தடுக்க கால்விரலால் இயக்கப்படும் லிப்ட்… சென்னை மெட்ரோ ரயில் அசத்தல் – வீடியோ

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குவதற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கைகளால் அழுத்தி லிப்ட் ஆபரேட் செய்வதை தவிர்க்கும் வகையில் கால் விரல்களைக் கொண்டு லிப்ட் ஆபரேட் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலுக்கு கைகளால் தொடுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால் காரணமாக, பொதுவாக கைகளால் தொடும் கைப்பிடிகள், கதவுகள் போன்றவற்றை கிருமி நாசினிகளைக் கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில்  இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் இயக்கத்தின்போது, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில், கைகளுக்கு பதில் கால் விரல்கள் மூலம் இயக்கப்படும் லிப்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

கைகளால் லிப்ட்களை இயக்கும்போது தொற்று பரவும் அபாயம் உள்ளதால், லிப்ட்களை இயக்குவதற்காக இந்த மாற்று வழியை செயல்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலகத்தில் இந்த லிப்ட் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேபோன்று அனைத்து ரயில் நிலையங்களிலும் காலால் இயக்க கூடிய லிப்ட் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி