உலகக்கோப்பை:  ரஷ்யா 5, சவுதி அரேபியா ஜீரோ !  

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபிய அணியை, ரஷ்ய அணி துவம்சம் செய்தது.

உலக  கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நேற்று ஆரம்பித்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்ய அணி – சவுதி அரேபியா மோதின.

இந்த விறுவிறுப்பான போட்டியில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் ரஷ்ய அணி வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணிக்காக யூரி கேஸ்சின்ஸ்கி கோல் அடித்து கணக்கை ஆரம்பித்தார்.  இதன்பின்னர் 43 ஆவது நிமிடத்தில் டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலை அடித்தார்.

இதனைத்தொடர்ந்து ஆர்ட்டம் 71 ஆவது நிமிடத்தில் ரஷ்ய அணிக்காக கோல் அடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் டெனிஸ் செரிஷேவ் மற்றுமொரு கோல் அடிக்க, அலெக்சாண்டர் கோலோவின் ரஷ்ய அணிக்காக ஐந்தாவது கோலை அடித்தார்.

இந்த வெற்றியை மைதானத்தில் திரண்டிருந்த ரஷ்ய அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.