இன்னும் 10 வருடங்களுக்குச் சென்னை அணியின் நிரந்தர தலைவர் தோனி

--

சென்னை

ன்னும் 10 வருடங்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிரந்தர தலைவராக தோனி இருப்பார் என அணியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தோனி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கு கிரிக்கெட் உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.   அவர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துள்ளார்.  அத்துடன் தற்போது ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக உள்ளார்.  அவரை சென்னை ரசிகர்கள் தல என அன்புடன் அழைப்பது வழக்கமாகும்.

‘தல’ தோனிக்கு நேற்றுடன் 39 வயது முடிவடைந்துள்ளது.  கிரிக்கெட் ரசிகர்கள் இதை ஒரு திருவிழாவைப் போல் நேற்று கொண்டாடி உள்ளனர்.   ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவானதில் இருந்து தொடர்ந்து தலைவராக உள்ள தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன்,  செய்தியாளர்களிடம், “தோனி வழி தனி வழி,   இன்னும் 10 வருடங்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி நிரந்தர தலைவராக விளங்குவார் என நான் நம்புகிறேன்.

அவருடைய அணி வீரர்கள் அனைவரது திறமையையும் அவரால் மட்டுமே வெளிக் கொணர முடிகிறது.   இதன் மூலம் அணி வீரர்கள் அனைவரையும் அவர் சிறப்பாக விளையாட வைக்கிறார்.  இந்த தலைமைப் பண்புக்காகவே அவரை நாங்கள் ‘தல’ என அழைக்கிறோம்” எனக் கூறி உள்ளார்.